துடுப்பாட்டத்தில் சொதப்பியது இலங்கை அணி (All out)

4 years ago
SPORTS
(77 views)
aivarree.com

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூரில் நடைபெற்று வருகிறது.

போட்டியின் இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை (13) இலங்கை அணி 109 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

இலங்கை அணி சார்பாக அதிகபட்சமாக அஞ்சலோ மெத்தியூஸ் 43 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

இந்தியா சார்பாக ஜஸ்பிரிட் பும்ரா 24 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்திய அணி தனது முதலாவது இன்னிங்ஸில் 252 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கட்டுக்களையும் இழந்திருந்த நிலையில் இந்திய அணி 143 ஓட்டங்கள் முன்னிலையில் இருக்கிறது.