tamilnewsline

தமிழ் மொழிக்கு பதிலாக சிங்களம்/ வவுனியா பல்கலைக்கழக கல்வெட்டில் திடீர் மாற்றம்

வவுனியா பல்கலைக்கழகத்தின் திரை நீக்க பகுதியில் இருந்த கல்வெட்டில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வவுனியா பல்கலைக் கழகத்திற்கு வெள்ளிக்கிழமை (11) விஜயம் செய்யும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ அதனை அங்குராப்பணம் செய்து வைக்கவுள்ளார்.

நுழைவாயில் பகுதியில் இருந்த கல்வெட்டில் காட்சிக்கு புலப்படும் வகையில் தமிழ் மொழி காணப்பட்ட நிலையில் தற்போது சிங்கள மொழி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு இவ்வாறு அவசர மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர்கள் சுட்டிக்காட்டினர்.

Exit mobile version