Aivarree

தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை

file photo

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டமைக்காக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள 11 தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் இன்று ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பட்டபோது நிபந்தனை அடிப்படையில் அவர்களை விடுவிக்க தீர்மானிக்கப்பட்டது.

அதேநேரம் தமிழக மீனவர்கள் இந்தியாவுக்கு திரும்பி செல்ல அவர்களுக்கான சட்ட உதவிகளை வழங்கி நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.

Exit mobile version