தந்தையை கொன்றதாக மகன் கைது / இராகலையில் துரதிஷ்ட்ட சம்பவம்

5 years ago
tamilnewsline.com

இராகலை – டெல்மார் தோட்டத்தில் தந்தை ஒருவர் கொல்லப்பட்டமைக்காக மகன் கைதானார்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் 62 வயதான சுப்பிரமணியம் செல்வநாயகம், அவர் இராகலை டெல்மார் மேல் பிரிவைச் சேர்ந்தவர்.

நேற்று (04) இரவு தந்தைக்கும் மகனுக்கும் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதால் மகன் தந்தையை தாக்கி கொலை செய்திருப்பதாக கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் உயிரிழந்தவரின் மகனை கைது செய்துள்ள இராகலை பொலிஸார் மேலதிக விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.