இரண்டு வருடங்களுக்கு பின்னர் முழுமையாக தடுப்பூசி பெற்ற சுற்றுலாப் பயணிகளை தங்கள் நாட்டிற்குள் அனுமதிக்க அவுஸ்திரேலியா தீர்மானித்துள்ளது.
இதற்கமைய, இம்மாதம் 21ஆம் திகதி முதல் சுற்றுலாப் பயணிகளுக்காக அந்நாடு கட்டங்கட்டமாக திறக்கப்படுகிறது.
ஈஸ்டர் பண்டிகைக்கு முன்னதாக எல்லையை முழுமையாக திறக்க அந்நாட்டு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
