சிறுமியின் வாயில் துப்பாக்கியால் சுட்ட நபர் / ஹப்புத்தளையில் சம்பவம் (PHOTO)

5 years ago
tamilnewsline.com

12 வயதான சிறுமி ஒருவரின் வாயில் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் ஒன்று ஹப்புத்தளை – கொஸ்வாந்தை பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் இடம்பெற்றுள்ளது.


சம்பவத்தில் பலத்த காயமடைந்த சிறுமி சீனிகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக எமது செய்தித் தொடர்பாளர் கூறினார். 


துப்பாக்கியால் சுட்ட 21 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 


உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றைச் சிறுமியின் வாயில் வைத்து விளையாட்டுக் காட்டியபோது, இந்த சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. 


மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.