சாதாரண தர பரீட்சை பிற்போகிறதா?

4 years ago
Sri Lanka
(263 views)
aivarree.com

கல்வி பொதுத் தராதார சாதாரண தர பரீட்சை மே மாதம் 23ம் திகதி முதல் ஜுன் 1 வரையில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த பரீட்சைக்கான வினாத்தாள்களை அச்சிடும்  பணிகளில் சிக்கல் எதிர்நோக்கப்படுகிறது.

டொலர் விலை அதிகரிப்பினால் தேவையான காகிதங்களை இறக்குமதி செய்ய முடியாத நிலை இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சாதாரண தர பரீட்சைகளை பிற்போடுவது குறித்து ஆலோசிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எவ்வாறாயினும், இதுகுறித்து அய்வரி செய்திகள், பரீட்சைகள் திணைக்களத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, இப்படி ஒரு சிக்கல் இருக்கின்ற போதும், பரீட்சைகளை ஒத்திவைப்பது குறித்து இன்னும் ஆலோசிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.