tamilnewsline

சர்வ கட்சி மாநாட்டை புறக்கணிக்கும் மூவர்

சிறிலங்கா சுதந்திர கட்சி விடுத்த கோரிக்கைக்கு அமைவாக இந்த மாதம் 23ஆம் திகதி சர்வகட்சி மாநாடு இடம்பெறவுள்ளது.

அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கப்பட்ட விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோரும், அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவும் சிறிலங்கா சுதந்திர கட்சியையும் உள்ளடக்கிய 11 கட்சிகளின் அணியாக செயற்படுகின்றனர்.

ஆனால் சர்வகட்சி மாநாட்டில் கலந்து கொள்வதில்லை என்று அவர்கள் மூவரும் அறிவித்துள்ளனர்.

எனினும் தங்களது யோசனைகள் இன்னொரு கட்சி ஊடாக முன்வைக்கப்படும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Exit mobile version