சமுதித வீடு தாக்கப்பட்டமை/ புஸ்பிக்காவிடம் விசாரணை

4 years ago
Sri Lanka
(46 views)
aivarree.com

சிங்கள ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் இலங்கை அழகுராணி புஷ்பிகா டி சில்வாவிடம் சுமார் இரண்டரை மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக அவர் உட்பட 37 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சாமுதியின் வீடு தாக்கப்படுவதற்கு சில மாதங்களுக்கு முன்னர் புஷ்பிகா டி சில்வா யூடியூப் சேனல் ஒன்றின் ஊடாக சமுதித சமரவிக்கிரமவுக்கு வழங்கிய நேர்காணல் குறித்து விசாரித்து வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக பிலியந்தலை காவல்துறையினர் தெரிவித்தனர்.

புஷ்பிகா டி சில்வா அவரது சட்டத்தரணி சரித் பத்திரத்னவுடன் பிலியந்தலை காவல் நிலையத்திற்குச் சென்றிருந்தார்.