Aivarree

கான்ஸ்டபிள் தாக்கி கொலை

ஹம்பாந்தோட்டை – தங்காலை – வித்தாரந்தெனிய பிரதேசத்தில் காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவர் தாக்கிக் கொல்லப்பட்டுள்ளார்.

34 வயதான குறித்த காவல்துறை உத்தியோகத்தர், அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்துப் பிரிவின், கசாகல சோதனைச்சாவடியில் பணியாற்றியவர்

விடுமுறையில் சென்றிருந்த அவர், நேற்றிரவு கடை சென்றபோது, சிலர் அவரைத் தாக்கி கொலை செய்துள்ளனர்.

தனிப்பட்ட முரண்பாடே இந்தக் கொலைக்கு காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version