காகிதப் பற்றாக்குறை| பாடசாலை பரீட்சைகளில் ஏற்படுத்திய மாற்றம்

4 years ago
Sri Lanka
(289 views)
aivarree.com

டொலர் தட்டுப்பாடு மற்றும் நாணயப் பெறுமதி இறக்கம் காரணமாக இலங்கைக்கு போதிய அளவு காகிதங்களை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் ஏற்கனவே பத்திரிகைதுறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது – பாட புத்தகங்களை அச்சிடும் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் பரீட்சை நடத்துவதற்கான சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

இதன் காரணமாக ஒன்பதாம் பத்தாம் பதினோராம் தரங்களின் மூன்றாவது தவணை பரீட்சைகள் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளன.

6ஆம் 7ஆம் 8ஆம் வகுப்புகளில் மூன்றாம் தவணை பரீட்சை பாடசாலை மட்டத்தில் இடம்பெற உள்ளது என மேல்மாகாண கல்வி திணைக்களம் அறிவித்துள்ளது.