கப்ராலுக்கு பதிலாக ஆட்டிகல | அதிரடி மாற்றம் விரைவில்

4 years ago
Sri Lanka
(152 views)
aivarree.com

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலை பதவி விலகுமாறு ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ பணித்துள்ளார்.

அண்மையில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் நடத்திய சந்திப்பின் போது அவரை பதவி விலக்க வேண்டும் என்ற கோரிக்கை IMF பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் அவரை பதவி நீக்கி, அவருக்கு பதிலாக திறைசேரி செயலாளர் S R ஆட்டிகலவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

IMF எதிரான கருத்துக்களை வெளியிட்டு வந்த அஜித் நிவாட் கப்ரால் அந்த பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்பதே சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளின் முதலாவது கோரிக்கையாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

The Morning

Reported by
Editorial Reporter