Aivarree

கப்பில் தேவ் சாதனையை முறியடித்த ரவிசந்திரன் அஷ்வின்

இந்திய – இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இதுவரையில் ரவிசந்திரன் அஷ்வின் 5 விக்கட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இதன்படி அவர் 85 டெஸ்ட் போட்டிகளில் 435 விக்கட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

இதன்மூலம், கப்பில் தேவ் 131 போட்டிகளில் பெற்ற 434 விக்கட் சாதனையை அஷ்வின் முறியடித்துள்ளார்.

இந்திய அணி சார்பாக அணில் கும்ளேவுக்கு அடுத்தபடியாக அதிக விக்கட்டுகளை வீழ்த்தியவராக அஷ்வின் உள்ளார்.

Exit mobile version