tamilnewsline

பெண் கொலை / அமைச்சரின் இணைப்பாளர் கைது

மத்துகம பிரதேசத்தில் கடந்த 15ஆம் திகதி சுட்டுக்கொல்லப்பட்ட மூன்று பிள்ளைகளின் தாயின் கொலை சதித்திட்டம் தீட்டிய சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவர் கைதானார்.

மத்துகமவில் செயற்படும் பாதாள கும்பல் தலைவரான ஷான் அரோஸின் மனைவியான அவர், அரச அமைச்சர் ஒருவரின் இணைப்பாளராகவும் இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் கடந்த 9 ஆம் திகதி மத்துகமவில் உள்ள சந்தேக நபரின் (கைதான பெண்) நிதி நிறுவனத்திற்கு சென்று தாக்குதல் நடத்தியுள்ளார்.

இதற்கு பழி வாங்கும் வகையில் அவரை கொலை செய்ய குறிவைக்கப்பட்ட போதும், அது திட்டமிட்டவகையில் நடைபெறாததால், அவரது மனைவி கொலை செய்யப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Exit mobile version