Aivarree

ஒஸ்ட்ரேலியா செல்லும் இலங்கைக்குழாம் / தடை செய்யப் பட்டிருந்தவர்களுக்கும் வாய்ப்பு

SLC

பெப்ரவரி 11 ஆம் திகதி ஒஸ்ட்ரேலியாவுக்கு எதிராகத் தொடங்கும் 5 போட்டி கொண்ட 20க்கு20 தொடருக்கான இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டது.


தசுன் சாணக தலைமையிலான 20 பேர் கொண்ட இந்த குழாமில், அண்மையில் நிறைவடைந்த சிறிலங்கா பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்றிருந்த வீரர்கள் பலருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. 


இதில் இங்கிலாந்துக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்ட போது ஒழுக்கவீனமாக செயற்பட்டமைக்காக தடைவிதிக்கப்பட்டிருந்த ஆரம்ப துடுப்பட்ட வீரர் தனுஸ்க குணதிலகவும் உள்ளீர்க்கப்பட்டுள்ளார். 


இவ்வாறு தடை விதிக்கப்பட்டிருந்த குசல் மெண்டிஸ் மற்றும் நிரோஷன் திக்வெல்ல ஆகியோர் சிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரின் இறுதிப் போட்டியில் இணைக்கப்பட்டிருந்தனர்.


எனினும் அவர்களில் குசல் மெண்டிஸ் மட்டுமே ஒஸ்ட்ரேலியாவுக்கு எதிரான தொடருக்கு உள்வாங்கப்பட்டுள்ளனர்.


சிறிலங்கா கிரிக்கட் வெளியிட்டுள்ள முழுமையான குழாம் விபரம்…

Exit mobile version