tamilnewsline

எரிபொருள் விலை | இன்னுமொரு தடவை கூடுமா?

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை – இந்திய எண்ணெய்க் கூட்டுத்தாபனம் என்பவற்றின் எரிபொருள் விலை கடந்த நாட்களில் அதிகரிக்கப்பட்டன.


இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மேலும் எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளது.


தற்போது மேற்கொள்ளப்பட்ட அதிகரிப்பின் ஊடாக, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு ஏற்படுகின்ற நட்டம் தீர்க்கப்படவில்லை.


எனவே டீசல் விலையை 120 ரூபாவால் அதிகரிக்க வேண்டும் என்று, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜயசிங்க தெரிவித்துள்ளார். 


டீசல் லீற்றர் ஒன்றுக்கு 120 ரூபாய் நட்டம் ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

Exit mobile version