எட்டு வயதான சிறுவன் மாடியில் இருந்து விழுந்து மரணம்

4 years ago
World
(83 views)
aivarree.com

எட்டு வயதான சிறுவன் ஒருவர் தொடர்மாடி குடியிறுப்பு ஒன்றின் நான்காம் மாடியில் உள்ள வீட்டில் இருந்து விழுந்து மரணித்தார்.

இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் உள்ள ஃபரீடாபாத் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வீட்டின் மேன்மாடத்தில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் எட்டு வயதான சிறுவன் தவறி விழுந்துள்ளார்.

இதனை அடுத்து அவரது பெற்றோரால் அவர் உடனடியாக வைத்தியசாலைக்குக் கொண்டுச் செல்லப்பட்ட போதும், அவர் மரணித்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

2ம் வகுப்பில் கற்றுவந்த அவர் தமது பெற்றோருக்கு ஒரே பிள்ளை என தெரிவிக்கப்பட்டுள்ளது.