tamilnewsline

உடப்புசலாவையில் தீ / 5 கடைகள் நாசம்

உடபுஸ்ஸலாவ நகரத்தில் சனிக்கிழமை மாலை ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 5 கடைகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.

இத் தீ விபத்தில் எவருக்கும் உயிராபத்தோ, காயங்களோ ஏற்படவில்லை என்ற போதும் பெரும் பொருள் நட்டம் ஏற்பட்டுள்ளது.

புடவை மற்றும் பிளாஸ்டிக் கடை என பெருமளவில் அடங்குவதாகவும், இதனால் ஏற்பட்ட சொத்து இழப்பு பல இலட்சங்களை தாண்டியுள்ளதாகவும் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தீ பற்றிய நேரத்தில் வேகமான காற்றும் வீசியதால் தீயை விரைவாக கட்டுப்படுத்த முடியவில்லை என கூறப்படுகிறது.

தீ ஏற்பட்டதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

மேலும் மலையகம் தொடர்பான செய்திகளை வட்சப்பில் பெற, எமது குழுவுடன் இணைந்து கொள்ளுங்கள்.

https://chat.whatsapp.com/KFiwYl8tMRdFaU7vTMIAAR

Exit mobile version