tamilnewsline

உக்ரையின் பக்கம் இருந்து எறிகணை வீச்சு / ரஷ்யாவுக்கு சேதம்.

உக்ரைனை ரஷ்யா சுவீகரிக்கவிருப்பதாக மேற்குலக நாடுகள் தெரிவித்து வருகின்ற போதும், அதனை ரஷ்யா மறுத்துவருகிறது.

இந்த நிலையில் உக்ரைனில் இருந்து ஏவப்பட்ட எறிகணை ஒன்று ரஷ்யாவின் பாதுகாப்பு படையினர் பயன்படுத்தும் எல்லைப் பாதுகாப்பு கட்டமைப்பை சேதப்படுத்தியுள்ளது.

பெப்ரவரி 21ம் திகதி காலை 9.50 அளவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ரஷ்யா இந்தக் குற்றச்சாட்டைத் தெரிவித்திருக்கின்ற போதும், இதுதொடர்பாக உக்ரைன் இன்னும் எந்த பதிலையும் வழங்கவில்லை.

Exit mobile version