tamilnewsline

உக்ரைன் – ரஷ்ய யுத்தம் / இலங்கை தேயிலை துறை சந்திக்கும் பாதிப்பு

ரஷ்யாவுக்கும் – உக்ரைனுக்கும் இடையிலான யுத்தம் காரணமாக இலங்கை தேயிலை துறைக்கு குறிப்பிடத்தக்க பாதிப்புகள் ஏற்படவுள்ளன.

கடந்த ஆண்டு ரஷ்யாவுக்கு இலங்கையில் இருந்து 29 மில்லியன் கிலோ தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டது.

சர்வதேச நாடுகள் ரஷ்யாவுக்கு எதிரான பொருளாதார தடைகளை விதித்துள்ள நிலையில், தேயிலை ஏற்றுமதிக்கான கொடுப்பனவை பெற்றுக் கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

அத்துடன் இலங்கையின் தேயிலையை அதிகளவு கொள்வனவு செய்கின்ற நாடாக ரஷ்யா உள்ளது. (துருக்கி, ஈராக்கிற்கு அடுத்தபடியாக)

எனவே இலங்கை தேயிலை துறைக்கு சந்தைப்படுத்தலிலும் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.

Exit mobile version