உக்ரைனில் ரஷ்யா தொடர்ந்து 7வது நாளாக தாக்குதல்களை நடத்தி வருகிறது.
புதன்கிழமை உக்ரைனின் கிழக்கு நகரான கெர்சானை ரஷ்யா கைப்பற்றியுள்ளதாக அந்த நாட்டின் அரச ஊடகம் தெரிவித்துள்ளது.
இதனை இன்னும் உக்ரைன் உறுதிப்படுத்தவில்லை.
அவ்வாறு உறுதிப்படுத்தினால், மொஸ்கோ தாக்குதலை ஆரம்பித்ததன் பின்னர் உக்ரைனில் கைப்பற்றப்படும் பெரிய நகரமாக இது அமையும் என்று கூறப்படுகிறது.
