இழுவைப்படகுடன் கைதான இன்னும் சில இந்திய மீனவர்கள்

4 years ago
Sri Lanka
(103 views)
aivarree.com

யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 6 இந்திய மீனவர்கள் இழுவைப்படகுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களது இழுவைப் படகு ஒன்றையும் கடற்படையினர் கைப்பற்றி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி இலங்கையில் கடந்த சில வாரங்களுக்குள் 47 இந்திய மீனவர்கள் படகுகளுடன் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இதனைத் தொடர்ந்து தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் குறித்த மீனவர்கள் விடுவிக்குமாறு இந்திய பிரதமருக்கு கடிதம் எழுதுவார் என எதிர்பார்க்கப்படுகிறது