இலங்கை – இந்திய வெளிவிவகார அமைச்சர்கள் சந்திக்கவுள்ளனர்

5 years ago
tamilnewsline.com

இந்தியாவிற்கான விஜயத்தை மேற்கொண்டிருக்கும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் திங்கட்கிழமை இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை சந்திக்கவுள்ளார்.

அவருடன் இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஸ் வர்தன் சிறிங்லாவையும் சந்திப்பார் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்தியா, இலங்கைக்கு 1.9 பில்லியன் டொலர்களை கடனுதவியாக வழங்குவதற்கு இணங்கி இருந்தது.

இதன்படி 0.9 பில்லியன் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் 1 பில்லியன் டொலர்களை பெறுவது சம்பந்தமாக ஜீ.எல்.பீரிஷின் இந்திய விஜயம் அமைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

அவர் இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனையும் சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.