சுற்றுலாப் பயணிகள் பல்கிப் பெருகுகின்றனர் – விடுதி கட்டணங்கள் உயர்வு

5 years ago
tamilnewsline.com

இலங்கையின் பொருளாதார நிதி நிலைமை சீராகும் வகையில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.


இந்த வருடத்தில் இதுவரையில் மாத்திரம் 46,942 பேர் வெளிநாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகளாக இலங்கை வந்துள்ளனர்.


நாளாந்தம் 3000 பேர் அளவுக்கு இலங்கை வருவதுடன், நாளாந்தம் 22 விமான சேவைகள் இடம்பெறுகின்றன.


ரஷ்யா(9,866), பிரித்தானியா(4,697), யுக்ரெயின்( 4,241), இந்தியா(3,784) மற்றும் நெதர்லாந்து(3,737) ஆகிய நாடுகளிலிருந்தே அதிக சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகின்றனர்.


சுற்றுலாப் பயணிகளின் அதிக வருகையால் தற்போது விடுதிகளில் அறைக்கான நாளாந்த கட்டணம் 50,000 ரூபாய் வரையில் அதிகரித்துள்ளது.