Aivarree

இலங்கைக்கு தப்ப முற்பட்ட கடத்தல் கும்பல் / படகில் மடக்கி பிடிப்பு

தூத்துகுடியில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 10 கிலோ க்றிஸ்டல் மெத்தம்ஃபெட்டமைன் போதைப் பொருளுடன் எட்டு பேர் கைதாகினர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை கைதான அவர்கள் எட்டு பேரும் தமிழகத்தின் இரண்டு கிராமங்களைச் சேர்ந்தவர்கள்.

மீன்பிடி படகு ஒன்றில் இலங்கைக்கு போதைப் பொருள் கடத்தப்படுவதாக புலனாய்வாளர்கள் வழங்கிய தகவலுக்கு அமைய, விசாரணைப் பிரிவு காவற்துறையினர் அவர்களை கைது செய்தனர்.

அவர்கள் கைது செய்யப்படுவதற்கு முன்னதாக படகில் தப்பிச் செல்ல முற்பட்ட போது, காவல்துறையினர் இன்னுமொரு படகில் சென்று அவர்களை 5 கடல்மைல் தொலைவில் மடக்கிப் பிடித்தனர்.

அவர்களுக்கு இந்த போதைப் பொருள் எவ்வாறு கிடைத்தது போன்ற விடயங்கள் குறித்த விசாரணை இடம்பெறுகிறது.

Exit mobile version