இன்ஸ்டாகிராம் (Instagram) தளத்தில் குழந்தை பாலியல் துஷ்பிரயோகப் பொருட்களை ஊக்குவிக்கும் அல்லது அதற்கு வழிவகுக்கும் வகையிலான விளம்பரங்கள் மற்றும் உள்ளடக்கங்களை உடனடியாக நீக்குமாறு மெட்டா நிறுவனத்திற்கு இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், இவ்வாறான கட்டண விளம்பரங்கள் தங்களின் சமூக ஊடகத் தளத்தில் எவ்வாறு அனுமதிக்கப்பட்டன என்பது குறித்து ஒரு வாரத்திற்குள் விளக்கமளிக்குமாறும் மெட்டா நிறுவனத்திடம் இந்திய அரசு கோரியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
