tamilnewsline

இனவழிப்பு குற்றவாளிகளை தண்டிக்க இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் – அன்புமணி ராம்தாஸ்

‘இலங்கையில் இடம்பெற்ற இனவழிப்புகளுடன் தொடர்படையவர்களை தண்டிக்க இந்தியா ஆவன செய்ய வேண்டும்’ என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராம்தாஸ் வலியுறுத்தியுள்ளார்.
மனித உரிமைகள் பேரவையின் மாநாடு ஆரம்பமாகியுள்ள நிலையில், அதுதொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதில், இந்திய பிரதிநிதி மனித உரிமைகள் மாநாட்டில் கலந்து கொண்டு தமிழ் மக்களது உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
மேலும் இனவழிப்பு குற்றங்களில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்படுவதற்கான அழுத்தங்களையும் இந்திய பிரதிநிதி ஐக்கிய நாடுகள் சபையில் கொடுக்க வேண்டும் என்றும் அன்புமணி கெட்டுக்கொண்டார்.

Exit mobile version