tamilnewsline

இந்திய வெளிவிவகார செயலரை சந்தித்தார் பசில்

இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, இந்திய வெளிவிவகார செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லாவை புது டெல்லியில் சந்தித்துள்ளார்.

நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல, இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோரும் இந்த சந்திப்பில் நிதி அமைச்சருடன் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த விஜயத்தின் போது, நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் மற்றும் இந்தியாவின் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ விக்ரம் மிஸ்ரி உள்ளிட்டோரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version