Aivarree

இந்தியர்களின் இலங்கை வருகையில் அதிகரிப்பு

கொவிட் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இலங்கை வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 155,000ஐ கடந்துள்ளது.

ரஷ்யா – உக்ரைன் மோதலைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகளாக இந்தியர்களின் இலங்கை வருகை அதிகரித்துள்ளது.

இலங்கைக்கு இந்த மாதம் முதல் 2 நாட்களில் 6,896 சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர்.

அவர்களில் இந்தியர்களின் எண்ணிக்கை 1,268 என சுற்றுலா அதிகாரசபை அறிவித்துள்ளது.

முன்னர் ரஷ்யா, உக்ரைன் போன்ற நாடுகளே இலங்கைக்கு அதிக சுற்றுலா பயணிகளை தந்திருந்தாலும், தற்போது அங்குள்ள சூழ்நிலை அந்த நிலைமையை மாற்றியுள்ளது.

எவ்வாறாயினும் மார்ச் மாதத்தின் முதல் இரு தினங்களில் 855 ரஷ்யர்களும், இலங்கை வந்துள்ளனர்.

Exit mobile version