Aivarree

ஆளும் கட்சியின் பங்காளிகளுக்கு இடையில் சந்திப்பு

ஆளும் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பங்காளிக்கட்சிகளின் பிரதிநிதிகள் வெள்ளிக்கிழமை கொழும்பில் சந்திக்கவுள்ளனர்.

அமைச்சர்களான விமல் வீரவன்ச அல்லது உதய கம்மன்பில ஆகியோரது இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

டொலர் தட்டுப்பாடு, மின்சாரம், எரிபொருள் மற்றும் அதிகரித்து வரும் வாழ்க்கை செலவினம் உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பாக இதன் போது ஆராயப்படவுள்ளது.

ஏற்கனவே பலதடவைகள் அவர்களுக்கு இடையில் சந்திப்புகள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version