Aivarree

ஆப்கானிஸ்தானில் ஏழைகளைத் தாக்கிய நில நடுக்கம்

ஆப்கானிஸ்தானின் மேற்குப் பகுதியில் திங்கள்கிழமை ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கத்தில் இதுவரை குறைந்தது 22 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


அமெரிக்கப் புவியியல் பணிமனையின் தரவுகளின்படி, 4.9 மற்றும் 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கங்கள் வடமேற்கு மாகாணமான பட்கிஸ்ஸை பாதித்தமையால், அங்கு வீடு மற்றும் கட்டடங்கள் இடிந்து விழுந்தன.


இடிபாடுகளில் இறந்து கிடந்தவர்களில் நான்கு குழந்தைகளும் அடங்குவதாகச் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறினார்.


மிகவும் ஏழ்மையான மக்கள் வாழ்கின்ற பிரதேசத்தில் பதிவான இந்த நில நடுக்கத்தால், 700க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. 


நிலநடுக்கங்கள் ஆப்கானிஸ்தானில் கணிசமான சேதத்தை ஏற்படுத்தும், அங்குப் பல குடியிருப்புகள் நிலையானதாகவோ அல்லது நன்கு கட்டப்பட்டதாகவோ இல்லை.

Exit mobile version