2022 ஆசிய கிண்ண (20/20 வடிவம்) இந்த ஆண்டின் பிற்பகுதியில் இலங்கையில் நடைபெறும்.
ஆசிய கிரிக்கட் பேரவையின் வருடாந்த பொதுக்கூட்டத்தின் போது, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
இதன்படி இந்த தொடரை ஒகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை இலங்கையில் நடத்த தீர்மானிக்கப்பட்டது.
அதற்கான தகுதிச் சுற்று போட்டிகள் 20 ஆகஸ்ட் 2022 முதல் விளையாடப்படும்.
இதேவேளை ஆசிய கிரிக்கட் பேரவையின் தலைவராக 2024வரை இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் செயலாளர் ஜெய் ஷா வே தொடர்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
