இலங்கை அணிக்கு எதிரான முதலாவது 20/20 போட்டியில் அவுஸ்திரேலியா டக்வர்த் லூவிஸ் முறைபடி 20 ஓட்டங்களால் வென்றது.
இந்த போட்டியில் அவுஸ்திரேலியா முதலில் துடுப்பாடி 20 ஓவர்களில் 9 விக்கட்டுகளை இழந்து 149 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
இலங்கை பதிலளித்தாடிய போது மழை குறுக்கிட்டதால், டக்வர்த் லூவிஸ் முறைபடி வெற்றி இலக்கு 19 ஓவர்களில் 143 என நிர்ணயிக்கப்பட்டது.
எனினும் இலங்கை அணியால் 19 ஓவர்களில் 8 விக்கட்டுகளை இழந்து 122 ஓட்டங்களை மாத்திரமே பெறமுடிந்தது.
இதன்படி அவுஸ்திரேலியா முதலாவது 20/20 போட்டியை 20 ஓட்டங்களால் வென்றது.
