Aivarree

அவசர சிகிச்சைப் பிரிவு வைத்தியர்கள் பலருக்கு கொவிட்

பதுளை பொது வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கும் வைத்தியர்கள் பலருக்கு கொவிட் தொற்று உறுதியாகி உள்ளது.

இதன் காரணமாக சிகிச்சை வழங்கும் நடவடிக்கைகளுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த பிரிவின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி, வைத்தியர் பாலித ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

குறித்த பிரிவில் ஒன்பது வைத்தியர்கள் கடமையாற்றி வரும் நிலையில் அவர்களில் 6 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.

இதேநேரம் குறித்த வைத்தியசாலையில் பணியாற்றும் 60 பேருக்கு இந்த மாதத்தில் தொற்று உறுதியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

Exit mobile version