tamilnewsline

அரச துறை பணியாளர்களை குறைசொல்லும் இன்னொரு அமைச்சர்

நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள நெருக்கடிகளுக்கு அரசியல்வாதிகளும் அரசத்துறையில் பணியாற்றுபவர்களுமே காரணமென அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

நெருக்கடிகளுக்கு பொறுப்பு கூற வேண்டிய பிரதான தரப்பினர் இவர்களே ஆவர்.

சமூகத்தில் அவ்வாறு மதிப்பிடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அவர் அதில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ பாதீட்டின் பின்னர் இவ்வாறான கருத்தை வெளியிட்டு, விமர்சனத்தை எதிர்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version