நாளாந்த மின்வெட்டு தவிர்க்க முடியாதது – மின்சபை

4 years ago
Sri Lanka
(71 views)
aivarree.com

நாட்டில் நாளாந்தம் மின்வெட்டை அமுலாக்குவதற்கான நிர்ப்பந்தம் ஏற்பட்டிருப்பதாக மின்சார சபை அறிவித்துள்ளது.


மின்னுற்பத்திக்கு போதுமான எண்ணெய் வளம் இல்லாமையாலும், தற்போது கையிருப்பில் இருக்கின்ற எண்ணெய் இன்றுடன் நிறைவடைவதாலும் இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது. 

அதேநேரம் இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனத்திடம் இருந்து மின்னுற்பத்திக்காக எண்ணெய்யைப் பெற்றுக் கொள்வது குறித்து மின்சாரத்துறை அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது.


இதுதொடர்பான முக்கிய கலந்துரையாடல் ஒன்று இன்று நடைபெறவுள்ளதாக அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.