இலங்கை மின்சார சபைக்கு இந்த வாரம் முழுவதும் மின்னுற்பத்திக்கான எரிபொருளை வழங்குவதாக, வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில உறுதியளித்திருந்தார்.
ஆனால் இதுவரையில் எரிபொருள் எதுவும் விநியோகிக்கப்படவில்லை.
இதனால் களனிதிஸ்ஸயில் உள்ள இரண்டு மின்னுற்பத்தி முனையங்களும் செயலிழந்துள்ளன.
இந்நிலையில் இன்று மாலை மின்சாரத் தடை ஏற்படுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
