எதிர்வரும் சுதந்திர தினத்தன்று அரசியல் கைதிகள் பலர் விடுவிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதிக்கு அரசியல் யாப்பின் 34ம் சரத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைவாக பொது மன்னிப்பின் கீழ் பலர் விடுவிக்கப்படவுள்ளனர்.
அவர்களில் பல அரசியல்கைதிகளும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதுதொடர்பான அறிக்கை இன்றையதினம் சிறைச்சாலைகள் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கடூழியச் சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்ற முன்னாள் ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கும் பொது மன்னிப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
