கொவிட் ஆபத்தில் சிறிபாத கல்வியியற் கல்லூரி?

5 years ago
Sri Lanka
(130 views)
aivarree.com

பத்தனை சிறிபாத கல்வியியற் கல்லூரியில் உரிய வகையில் சுகாதார அறிவுறுத்தல்கள் பின்பற்றப்படவில்லை என்று சுகாதாரத் தரப்பினால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதனால் பல ஆசிரிய மாணவர்கள் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாகக் கூறப்படுகிறது.

அண்மையில் அங்கு நடைபெற்ற பொங்கல் விழாவை மையப்படுத்தியே இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

எனினும் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள கல்லூரியின் தலைவர் கு.துரைராஜசிங்கம், மாணவர்கள் உரியச் சுகாதார வழிகாட்டல்களுடன் நடத்தப்படுவதாகத் தெரிவித்தார்.

கொவிட் கட்டுப்பாட்டுக்காக விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுச் செயற்படுவதாகவும் அவர் கூறினார்.