கோண்டாவில் வீடு உடைப்பு/ மூவர் கைது

4 years ago
Sri Lanka
(31 views)
aivarree.com

யாழ்.கோண்டாவில் பகுதி வீடொன்றின் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த குழு ஒன்று நேற்றையதினம் குறித்த வீட்டினுள் அத்துமீறி நுழைந்து தாக்குதலை நடத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் காவல் பிரிவிற்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சிசிடிவி கமரா உதவியுடன் 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் யாழ் வண்ணார்பண்ணையைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதோடு மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன.