இலங்கை கிரிக்கெட்டின் முன்னாள் தலைவர் உபாலி தர்மதாச காலமானார்

4 hours ago
Sri Lanka
(8 views)
aivarree.com

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான உபாலி தர்மதாச காலமானார்.

இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் முக்கிய பங்காற்றிய அவர், பல சந்தர்ப்பங்களில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராகப் பதவி வகித்துள்ளார்.

அவரது மறைவு தொடர்பான மேலதிக தகவல்களும், இறுதிக்கிரியைகள் தொடர்பான அறிவிப்புகளும் பின்னர் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.