தமிழ் பேசும் மக்களின் அரசியல் பேரவையில் தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் கூட்டணியின் பிரதிநிதியாக நாடாளுமன்ற உறுப்பினர் வி.இராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமைக்குழுவினால், எடுத்த தீர்மானத்தின் அடிப்படையில், கூட்டணியின் பிரதிநிதியாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வி. இராதாகிருஷ்ணன் பெயரிடப்பட்டுள்ளதாக, அந்த கூட்டணித் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் குழு உறுப்பினரான பரத் அருள்சாமி, பேரவையில் கூட்டணியை பிரதிநிதித்துவப்படுத்துவதுடன், வி. இராதாகிருஷ்ணனுக்கு உதவியாக செயல்படுவார் என்றும் மனோ கணேசன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
