பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார்

3 hours ago
World
(5 views)
aivarree.com

பிரபல மூத்த பின்னணி பாடகி எஸ். ஜானகி தனது 88 ஆவது வயதில் காலமானார்.

அவரது மறைவை உறவினர்கள் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளனர்.

கடந்த 1957 ஆம் ஆண்டு வெளியான ‘விதியின் விளையாட்டு’ என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலமாகவே இவரது புகழ்பெற்ற இசைப் பயணம் ஆரம்பமானது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி உட்பட பல மொழிகளில் 40,000 இற்கும் அதிகமான பாடல்களைப் பாடி, பல தசாப்தங்களாக ஒட்டுமொத்த ரசிகர்களையும் தனது குரலால் கட்டிப்போட்டவர்.

இசைஞானி இளையராஜா மற்றும் மறைந்த பாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியம் ஆகியோருடன் இணைந்து எஸ். ஜானகி உருவாக்கிய பாடல்கள் இன்றும் ரசிகர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்துள்ளன.

தனது அசாத்திய பாடும் திறமைக்காக நான்கு முறை தேசிய விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளார்.

இது தவிர, பல்வேறு மாநிலங்களின் 33 திரைப்பட விருதுகளையும் இவர் தன்வசப்படுத்தியுள்ளார்.

தனித்துவமான குரலால் ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவையும் ஆட்டிப்படைத்த இசையரசியின் மறைவு, இசை உலகிற்கு பேரிழப்பாகும்.