உலகப் புகழ்பெற்ற பாடகி பொனி டைலர் காலமானார்

3 hours ago
World
(4 views)
aivarree.com

Total Eclipse of the Heart, Holding Out for a Hero, மற்றும் It’s a Heartache போன்ற பல பிரபல பாடல்கள் மூலம் உலகளவில் ரசிகர்களைக் கவர்ந்த பிரபல பாடகி பொனி டைலர் (Bonnie Tyler), தனது 75ஆவது வயதில் காலமானார்.

அவருக்கு ஏற்பட்ட நீண்டகால நோய் நிலைமை காரணமாக, போர்த்துக்கலில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் , சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

தனித்துவமான, சற்று கரகரப்பான குரல் வளத்தால் உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்களைத் தன்வசப்படுத்திய பொனி டைலர், பிரித்தானியாவின் மிகச் சிறந்த இசைக்கலைஞர்களில் ஒருவராகப் போற்றப்படுகின்றார்.

இவரது மறைவுக்கு உலகெங்கிலும் உள்ள இசை ரசிகர்களும் பிரபலங்களும் தமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றார்கள்.