11 பேருக்கு பொதுமன்னிப்பு: ட்ரம்பின் முடிவால் அரசியலில் புதிய விவாதம்!

2 hours ago
World
(5 views)
aivarree.com

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 11 பேருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார்.

இவர்களில் பெரும்பாலானவர்கள் “சுத்தமான காற்று சட்டத்தை” மீறிய குற்றச்சாட்டின் கீழ் தண்டனை பெற்றவர்கள் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த 11 நபர்களில் 9 பேர், வாகனங்களின் உமிழ்வுக் கட்டுப்பாட்டு அமைப்புகளை மாற்றியமைத்து விற்பனை செய்த குற்றத்திற்காகவே தண்டனைக்குள்ளாகியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதே வேளை, குறித்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி ட்ரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) சமூக ஊடக கணக்கில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.

“முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகத்தின் போது, இந்த நபர்கள் தங்களது சொந்த வாகனங்களை ‘பழுதுபார்த்த’ குற்றத்திற்காகவே தண்டனைக்குள்ளாகியிருந்தனர் எனக் குறிப்பிட்டிருந்தார்.