பாகிஸ்தானில் கோர விபத்து: 40 பேர் பரிதாபமாக பலி!

3 hours ago
World
(4 views)
aivarree.com

பாகிஸ்தானில் பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து 80 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40 பேர் உயிரிழந்துள்ளதுடன், 8 பேர் காயமடைந்துள்ளனர்.

குவெட்டாவிலிருந்து பெஷாவர் நோக்கி 48 பயணிகளுடன் பயணித்த பேருந்தொன்றே, பலுசிஸ்தான் மற்றும் கைபர் பக்துன்வா மாகாணங்களின் எல்லையிலுள்ள செஹ்ரானி-சோப் நெடுஞ்சாலையின் டானாசாரில் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்துக்குள்ளான பேருந்தில், ஏற்கனவே வழியில் பழுதடைந்திருந்த வேறொரு பேருந்தின் பயணிகளும் ஏற்றிச்செல்லப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

விபத்து நடந்த இடம் மலைப்பகுதி என்பதால் காவல்துறை மற்றும் மீட்புப்படையினர் கடும் சிரமத்திற்கு மத்தியில் மீட்புப் பணிகளை முன்னெடுத்தனர்.