அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதி காணொளி ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் விசாரணை நடவடிக்கைகளுக்காக அவரது மடிக்கணினி மற்றும் கையடக்கத் தொலைபேசி ஆகியவற்றின் கடவுச்சொற்களை வழங்குமாறும் அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
