Dமுல்லைத்தீவு மாணவர்கள் கடத்தல் | தப்பிய மாணவன் அதிர்ச்சி தகவல்

4 years ago
Sri Lanka
(126 views)
aivarree.com

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் தனியார் வகுப்பு ஒன்றுக்கு சென்றிருந்த வள்ளிபுனம் பகுதியைச் சேர்ந்த மாணவன் ஒருவர், வேன் ஒன்றில் கடத்தி செல்லப்பட்டுள்ளார்.

அவர் ஒரு காட்டுப் பகுதிக்கு கொண்டுச் செல்லப்பட்டதன் பின்னர் அவர்களிடம் இருந்து தப்பி வந்துள்ளார், என எமது முல்லைத்தீவு செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த மாணவன் கடத்தி செல்லப்பட்ட வேனுக்குள் மேலும் 2 சிறுவர்கள் கை, கால்கள் கட்டப்பட்டு வாய்க்கு பிளாஸ்டர் ஒட்டப்பட்ட நிலையில் இருந்ததாக தப்பிய மாணவன் தகவல் தெரிவித்துள்ளார்.

கடத்தப்பட்ட மாணவன் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மாஞ்சோலை வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைபெற்று வருகிறார்.

புதுக்குடியிருப்பு காவல்துறையினரை அய்வரி செய்திகள் குழு தொடர்பு கொண்டு கேட்டபோது, இன்னும் உத்தியோகப்பூர்வ பதிவு எதுவும் கிடைக்கப்பெறவில்லை எனவும், தகவல் குறித்து ஆராய்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.