இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் செயலர் – ஜனாதிபதி சந்திப்பு

5 years ago
tamilnewsline.com

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் செயலாளர் ஜே ஷா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை வெள்ளிக்கிழமையன்று சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவும் கலந்துகொண்டார்.

நாளை (18) நடைபெறவுள்ள ஆசிய கிரிக்கெட் பேரவையின் வருடாந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகவே அவர் நாட்டை வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.