இலங்கைக்கு அருகில் புயல்

4 years ago
Sri Lanka
(271 views)
aivarree.com

இந்த மாதம் 21 ஆம் திகதி இலங்கைக்கு அருகில் புயல் ஒன்று உருவாவதற்கான சாத்தியங்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

வளிமண்டலவியல் திணைக்களத்தின் தகவல்களின்படி, தற்போது வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்க நிலை, இந்த மாதம் 21 ஆம் திகதி புயலாக உருவாகும் நிலை இருக்கிறது.

இது அந்தமான் தீவுகளுடன் கிழக்கு-வடகிழக்கு திசையில் பயணிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் வங்காள விரிகுடாவின் தென்மேற்கு பகுதி கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த நிலைமையில் இலங்கையில் மணிக்கு 45 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று எதிர்வரும் நாட்களில் வீசக்கூடும் என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

Reported by
Editorial Reporter